FILMISPACE.IN

Latest National & International News Of Entertainment, Sports, Politics & Business

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,666 கோடி மதிப்பிலான பலன்களை வழங்கியுள்ளது

  • 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ‘டேர்ம் பிளான்’ வணிகம்4% வளர்ச்சி கண்டுள்ளது
  • இத்துறையிலேயே மிகச்சிறந்த அளவாக, 99.3% காப்பீட்டுத் தீர்வு விகிதத்தை நிறுவனம் பதிவுசெய்துள்ளது
  • வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்8% அதிகரித்து ₹ 386 கோடியாக உயர்ந்துள்ளது

மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஜூன் 2026-ல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தனது நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 27.8% வளர்ச்சியைப் பதிவுசெய்து, லாபத்தை ₹ 386 கோடியாக எட்டியுள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் ‘டேர்ம் பிளான்’ வணிகம் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 60.4% வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பெயரை ‘ICICI Life Insurance Limited’ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அனுப் பாக்சி கூறியதாவது: “வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் உத்தியின் மையமாகத் திகழ்கிறது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் எங்களின் காப்பீட்டுத் தொகை கோரிக்கைத் தீர்வு விகிதம் 99.3% ஆகவும், கூடுதல் விசாரணை தேவைப்படாத கோரிக்கைகளுக்கு சராசரியாக ஒரு நாளுக்குள் தீர்வு காணும் வேகமும் எங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் தேவைப்படும் நேரத்தில், அவர்களுக்குத் துணையாக இருப்பதில் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது.

இந்தக் காலாண்டில், ₹1,306 கோடி மதிப்பிலான இறப்பு தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டோம்; மேலும் முதிர்வு, வாழ்நாள் பலன்களாக ₹3,360 கோடியை வழங்கினோம். இது எங்கள் பாலிசிதாரர்களுக்கு உரிய நேரத்தில் நிதிப் பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குவதில் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், 2026 நிதியாண்டில், ₹5,149 கோடி மதிப்பிலான இறப்பு தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டோம் மற்றும் ₹15,363 கோடியை முதிர்வு – வாழ்நாள் பலன்களாக வழங்கினோம்.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் வரிகளுக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 27.8% அதிகரித்து ₹386 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சில்லறைப் பாதுகாப்பு காப்பீட்டு வணிகத்தில் 60.4% என்ற வலுவான வளர்ச்சியை நாங்கள் பதிவுசெய்துள்ளோம்; இது இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

செயல்திறனை மேம்படுத்தவும் வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்தவும் விலை குறைப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த உள்ளோம். முக்கியமாக, 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் எங்களின் சேமிப்புத் திட்டங்களுக்கான ‘பிரீமியத்துக்கான செலவு விகிதம்’ 50 அடிப்படை புள்ளிகள் குறைந்து 13.6% ஆக உள்ளது. இது புதுமையான முயற்சிகளில் மீண்டும் முதலீடு செய்யவும், டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கவும் எங்களுக்கு உதவுகிறது.

சம்பந்தப்பட்ட ஒப்புதல்களுக்கு உட்பட்டு, நிறுவனத்தின் பெயரை ‘ICICI Life Insurance Limited’ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இயக்குநர்கள் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தப் பெயர், ICICI பிராண்ட் கொண்டுள்ள வலிமை, நம்பிக்கை, பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. எங்கள் வணிகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது, வழக்கம் போல் செயல்படுகிறது; அதேவேளையில், எங்கள் சேவையின் வரம்பை விரிவுபடுத்துதல், வாடிக்கையாளர் மதிப்பை உயர்த்துதல், இந்தியாவின் வளர்ந்து வரும் ஆயுள் காப்பீட்டுச் சந்தை வழங்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில்          ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,666 கோடி மதிப்பிலான பலன்களை வழங்கியுள்ளது